
காத்தான்குடி சிறுவனின் மரணம் கொலையா என உறுதியாகவில்லை : பொலிஸார் தெரிவிப்பு
சாய்ந்தமருது மத்ரஸா பாடசாலையில் கடந்த 5 ஆம் திகதி 13 வயது சிறுவனின் மரணம் தொடர்பான பிரேதப் பரிசோதனையில், மரணத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவா இது தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்றிக்கு கருத்து தெரிவிக்கையில், பிரேத பரிசோதனையை மேற்கொண்ட மரண விசாரணை அதிகாரியும் வைத்தியர்களும் மரணம் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளனர், ஆனால் இது கொலையா என்பதை குறித்து இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
13 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மத்ரஸா பாடசாலையின் மௌலவி இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக சிரேஸ்ட பொலி பொலிஸார்; அத்தியட்சகர் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை மதரஸா பள்ளியில் சிறுவன் சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறுவன் தற்கொலை செய்து கொண்டதாக முதலில் சந்தேகிக்கப்பட்டது.
எனினும், இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அப்பகுதி மக்கள் அன்று இரவு மதரஸா பள்ளியை முற்றுகையிட்டனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த சாய்ந்தமருது பொலிஸார் மரணம் தொடர்பில் மத்ரஸா பாடசாலையின் மௌலவியை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் குடும்பத்தாரிடம் நேற்று வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்ட நிலையில் , காத்தான்குடியில் நேற்று இரவு ஜனாஸா நல்லடக்கம் இடம்பெற்றது.
