
பாதாள உலக தலைவன் ‘கஞ்சிபானி’ இம்ரான் இந்தியாவுக்கு தப்பி ஓட்டம்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் தலைவர் எனப் பெயர் பெற்ற கஞ்சிபானி இம்ரான் இலங்கையிலிருந்து தமிழகத்திற்குள் நுழைந்துள்ளதாக ‘தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.
பாதாள உலக தலைவன் கஞ்சிபானி இம்ரான் ராமேஸ்வரத்துக்குள் நுழைந்ததாக தமிழக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விழிப்புடன் இருக்குமாறு மாநிலம் முழுவதும் உள்ள உயர் பொலஜஸ் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன.
‘தி இந்து’ வெளியிட்டுள்ள செய்தி
Underworld gangster ‘Kanjipani’ Imran sneaks into Tamil Nadu from Sri Lanka