
கன்னியா இராவணேஸ்வரன் தமிழ் வித்தியாலயம் :தப்பு நடனம் ,கிராமிய குழு நடனத்தில் 2ஆம் இடம்
-திருமலை நிருபர்-
திருகோணமலை -கன்னியா இராவணேஸ்வரன் தமிழ் வித்தியாலய மாணவ,மாணவிகளை கௌரவிக்கும் நேற்று சனிக்கிழமை பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
அகில இலங்கை பரதநாட்டிய போட்டி தேசியமட்டம் கடந்த 18ஆம் திகதி அன்று அனுராதபுரம் மத்திய கல்லூரியில் நடைபெற்றது .
திருகோணமலை கன்னியா இராவணேஸ்வரன் தமிழ் வித்தியாலயம் – தப்பு நடனம் -கிராமிய குழு நடனத்தில் இரண்டாம் இடத்தினை பெற்று வெற்றி பெற்றுள்ளது .
இப்பாடசாலையானது தேசிய மட்டம் வரை சென்றது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
பயிற்றுவித்த ஆசிரியர்-திருமதி .சுஜீவன் பிரசாந்தினி ,பாடல் ஆசிரியர் திருமதி.கோகிலன் வாத்தியம் – மாணவன் கை.வினோயன் ,லவர்சன் மற்றும் மாணவர்களான சி.டிஷாந்த் கெ.அபிஷேக் ,க .பிராசன் ,கா .சோன்ஜன் ,செ .சரணி ,எஸ்.திவ்யா, க .கரணி ,ச.நிவேதிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த வெற்றிக்கு முழுமையான ஒத்துழைப்புத் தந்த இப்பாடசாலை அதிபர் திரு.தாமோதரம்பிள்ளை சிவானந்தம் ஆகியோர் உட்பட மாணவர்களையும் கௌரவித்து பெற்றோர்கள் சின்னம் அணிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
இக்கிணற்றை அமைப்பதற்கான நிதியைக் கனடாவில் வாழும் நக்கீரன் ஐயா என அழைக்கப்படும் திரு வேலுப்பிள்ளை தங்கவேலு அவர்கள் வழங்கி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

