கல்முனையில் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு

திருடிச்செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான வீதியில் மரக்கறி கடை உரிமையாளர் ஒருவரின் டியோ ரக ஸ்கூட்டர் மோட்டார் சைக்கிள் கடந்த செவ்வாய்க்கிழமை திருடப்பட்டிருந்தது.

காரைதீவு பொலிஸ் நிலையத்திற்கு இச்சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது குறித்த மோட்டார் சைக்கிள் இனந்தெரியாத ஒருவரால் களவாடி செல்வது தொடர்பான சிசிடிவி காணொளியில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நேற்று சனிக்கிழமை  கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான வீதியில் ஹெல்மட் ஒன்றுடன் கைவிடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று நீண்ட நேரமாக தரித்து நிற்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, குறித்த களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது.

கல்முனையில் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு

கல்முனையில் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு