K2K மோட்டார் வாகன பேரணி ஆரம்பம்
-கிரான் நிருபர்-
போதையற்ற கல்குடா எனும் அமைப்பினால் கல்குடா தொடக்கம் காத்தான்குடி வரையான மோட்டார் வாகன பேரணி கல்குடா வீதியில் உள்ள உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு முன்பாக இன்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமாகியது.
இப்பேரணியை வாழைச்சேனை பிரதேச உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எல்.எம்.ஜெமில் கொடி அசைத்து ஆரம்பித்து வைத்தார்.
‘போதையற்ற சமூகத்தை உருவாக்குவோம் போதை வியாபாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துவோம்’ என்ற தொணிப் பொருளில் ஒன்றாய் பயணிப்போம் வாருங்கள் என இவ் மோட்டர் பவனியானது வாழைச்சேனை வீதி வழியாக மட்டக்களப்பு கொழும் வீதி வழியாக தேசிய கொடியினை சுமந்தபடி ஊர்வலமாக மோட்டார் சைக்கிளில் பயணித்தது.
வாழைச்சேனை, காவத்தமுனை, செம்மன்னோடை போன்ற பிரதேசங்களுக்கு ஊர்வலமாகச் சென்று அங்கிருந்து ஏறாவூர், மட்டக்களப்பு, காத்தான்குடி வரை சென்று பின்னர் மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்தித்து போதைப் பொருளின் பாவனையை கட்டுப்படுத்தி தருமாறு தெரிவித்து அவரிடம் மகஜர் கையளிக்கப்படவுள்ளது.
இதன்போது வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்தபண்டார, ஓட்டமாவடி வர்த்தக சங்கத் தலைவர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்