உலகக் கிண்ண மகளிர் T20 கிரிக்கெட் : இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று
உலகக் கிண்ண மகளிர் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் இலங்கை நேரப்படி இன்று மாலை 6.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க மகளிர் அணிகள் இன்று மோதவுள்ளன.
இந்தநிலையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய மகளிர் அணி, இறுதி போட்டிக்கு தகுதிபெற்றது.
அதற்கமைய, இன்று வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.
உலகக் கிண்ண மகளிர் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கேப்டவுனில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.