
இலங்கையில் ஜப்பான் வைரஸா?
ஜப்பானில் பரவும் வைரஸ் இலங்கையில் பரவும் ஆபத்து இப்போதைக்கு இல்லை என சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் பரவி வரும் இந்த வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அது இலங்கையிலும் பரவும் சாத்தியங்கள் உள்ளனவா என்று பாராளுமன்றில் இன்று வியாழக்கிழமை கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதில் வழங்கிய அவர், இந்த வைரஸானது ஜப்பானில் பரவி வருகின்ற போதும், அதனைக் கட்டுப்படுத்த அந்நாட்டின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும் இது கட்டுப்படுத்த முடியாத வைரஸ் ஒன்றுமல்ல எனவும் சிகிச்சை முறைமைகள் ஊடாக இதனைக் கட்டுப்படுத்தலாம்.
அதனால் இது பெருந்தொற்றாக மாறக்கூடிய ஆபத்தில்லையெனவும் இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல விளக்கமளித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
