
அடை மழையால் நீரில் முழ்கியுள்ள நெற்பயிர்கள்
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்தில் கடந்த மூன்று தினங்களாக அடைமழை பெய்து வருகின்றது.
தொடர்சியாக பொழிந்து வருகின்ற இவ்வாறான கனமழையின் காரணமாக, யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதிக்குட்பட்ட மட்டுவில் கிராம நெற் பயிர்கள் நீரில் மூழ்கிய நிலையில் இருப்பதனை அவதானிக்க முடிகின்றது.
மழை வீழ்ச்சி தொடருமிடத்து நெற்பயிர் செய்கை அழியும் நிலை வரும் என விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
