யாழ்.வட்டுக்கோட்டை சாரணியர்கள் ஜனாதிபதி விருதுக்கான நடைபயணம்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சாரணியர்கள் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நடைபயணம் ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.

ஜனாதிபதி விருதினை பெறுவதற்காக சுமார் 22 கிலோமீட்டர்கள் தூரமான நடைபயணத்தை பாடசாலையில் இருந்து ஆரம்பித்தனர்.

பாடசாலையில் இருந்து ஆரம்பித்த நடைபயணமானது வட்டுக்கோட்டை சந்தி, அராலி பாலத்தினூடாக அராலி முருகமூர்த்தி பாடசாலையை நேற்றுமுன்தினம் வந்தடைந்தது.

பின்னர் அங்கு முகாமிட்டு பொழுதை கழித்துவிட்டு மீண்டும் நேற்று ஞாயிற்றுக்கிழமை அங்கிருந்து நடைபயணம் ஆரம்பமானது.

இவ்வாறு ஆரம்பமான பயணம் மீண்டும் வட்டுக்கோட்டை சந்தி, பொன்னாலை சந்தி, சுழிபுரம் சந்தி, சித்தங்கேணி சந்தியூடாக வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியை சென்றடையவுள்ளது.