யாழ். போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக்கும் திட்டம்

யாழ். போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவது தொடர்பாக நேற்றைய தினம் திங்கட்கிழமை அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த முன்மொழிவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழிமொழியப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், மிகவிரைவில் தரமுயர்த்தப்படவுள்ள யாழ். போதனா வைத்திசாலைக்கு பௌதீக மற்றும் ஆளணி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டு வடக்கு மக்களுக்கு மேலும் சிறப்பான சேவையை வழங்குவதற்கான சூழல் உருவாக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்