
வியட்நாம் கடலில் மீட்கப்பட்ட அகதிகளில் 76 பேர் யாழ்.மாவட்டத்தை சேர்ந்தவர்கள்
கனடாவுக்கு செல்வதாக அழைத்து செல்லப்பட்டு வியட்நாம் கடலில் மீட்கப்பட்ட 303 இலங்கை அகதிகளை அடையாளம் காணும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாகவும் உள்ளூர் அதிகாரிகளால் உணவு, தங்குமிடம் வழங்கப்படுகிறது என வியட்நாமிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை மீட்கப்பட்ட இலங்கையர்களில் 76 பேர் யாழ்.மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் மலேசியாவிற்கு விமானம் மூலம் சென்று, படகு மூலம் வேறொரு நாட்டுக்கு செல்வதற்காக பயணித்துள்ளதாகவும், படகில் ஏறுவதற்கு முன் ஆட்கடத்தல்காரர்களுக்கு பல இலட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளனர்.
