கிணற்றிலிருந்து முதியவரின் சடலம் மீட்பு
-யாழ் நிருபர்-
யாழ் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, தவடி வடக்கு – கொக்குவில் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து முதியவர் ஒருவரது சடலம் இன்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் மாணிக்கம் வேலாயுதபிள்ளை (வயது86) என அடையாளம் காண்பட்டுள்ளார்.
சடலமானது பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.