வெடிக்காத நிலையில் கண்ணிவெடி கண்டுபிடிப்பு

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட, ஊர்காவற்துறை- பருத்தி அடைப்பு, ஜே/50 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட குளக்கரைக்கு அருகில் வெடிக்காத நிலையில் கண்ணிவெடி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த கண்ணி வெடியினை நீதிமன்றத்தின் அனுமதியின் பின்னர் மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.