
பங்குனிமாத வசந்தகால குளிர்த்தி பவனி
வரலாற்று சிறப்புமிக்க யாழ். வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தின் பங்குனிமாத வசந்தகால குளிர்த்தி பவனி உற்சவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பக்திபூர்வமாக இடம்பெற்றது.
கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீ வண்ணை ஸ்ரீவீரமாகாளி அம்மனுக்கும் விஷேட அபிஷேசக ஆராதனைகள் இடம்பெற்றது. பின்னர் வசந்தமண்டபத்தில் இருந்து எழுந்தருளியாக எம்பெருமாட்டி வெளிவீதியில் வெள்ளிரததேரேரி வீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இப் பவனியானது பருத்தித்துறை வீதியில் ஆரம்பித்து, ஆனைப்பந்தியடி வீதி, கோவில் வீதி, பருத்தித்துறை வீதியுடாக வந்து ஆலயத்திற்கு சென்றடைந்ததை அடுத்து பங்குனி மாத வசந்தகால குளிர்த்தி இனிதே நிறைவடைந்தது.
இவ் உற்சவம் கிரியைகளை ஆலய பிரதம குரு எஸ்.கமல்ராஜ் குருக்கள் நடாத்திவைத்தார்.



