பாடசாலையின் திறன் வகுப்பறை கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பித்து வைப்பு

-யாழ் நிருபர்-

 

யாழ்.உரும்பிராய் பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கம் – கனடா, ஐக்கிய இராட்சியத்தை தளமாகக் கொண்டு இயங்கும் இரட்ணம் பவுண்டேசன், lMHO ஆகிய நிறுவனங்களின் நிதிப்பங்களிப்பில் யாஃஉரும்பிராய் றோ.க.த.க பாடசாலையில் அமைக்கப்பட்ட திறன் வகுப்பறைக் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் கடந்த புதன்கிழமை காலை 10.00 மணிக்கு குதூகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் திரு ஜே.மகிந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், விருந்தினர்களாக உரும்பிராய் இந்துக்கல்லூரி பழைய மாணவனும் பொறியியலாளருமான திரு செல்வன் செல்வதுரை,  உரும்பிராய் மேம்பாட்டு ஒன்றியத்தின் தலைவர் வைத்திய கலாமணி திரு வே.கணேசவேல், யாழ்கல்வி வலய உதவி கல்விப்பணிப்பாளர் திரு ச.சிவகுமார் ,  காந்திஜி சனசமூக நிலைய தலைவர் திரு தே.றமணதாசன்   கலந்து சிறப்பித்தனர்.

மாணவ மாணவிகள் திறன் பலகையில் தமது பாடங்களில் செயற்பட்ட விதம் நிகழ்வில் பங்கேற்றவர்களை ஈர்த்தது. ஏற்கனவே இரட்ணம் பவுண்டேஷனின் ஏற்பாட்டில் பயிற்சி வழங்கப்பட ஆசிரியரின் வழிகாட்டலில் ஆசிரியர் ஒருவரும் திறன் பலகையை தம் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இந்நிகழ்வில் செய்து காட்டியமை குறிப்பிடத்தக்கது.

உதவியளித்திருந்த அமைப்புக்களுக்கு அதிபர் உட்பட விருந்தினர்களால் நன்றி தெரிவிக்கப்பட்டதுடன், திறன் பலகையை கற்றல் கற்பித்தலுக்கு செயற்படுத்துவது தொடர்பான உபாயங்களும் வழங்கப்பட்டன.

அத்துடன் மாணவர்கள் தமது புலக்காட்சித்திறன் ஊடாக எவ்வாறு திறன் பலகையை கையாண்டு சிறப்பாக கற்றல் பேறுகளை அடையலாம் என்பது பற்றிய அறிவுரைகளும் விருந்தினர்களால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.