திடீரென தீப்பற்றி எரிந்த வாகனம்

யாழ். காங்கேசன்துறை பிரதான வீதியின் மாவிட்டபுரம் பகுதியில் ஓடிக்கொண்டிருந்த ஹயஸ் வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 09.45 மணியளவில் இடம்பெற்றதாக தெல்லிப்பளை பொஸிஸார் தெரிவிக்கின்றனர்.

இதில் சாரதி மயிரிழையில் உயிர்தப்பியுள்ளார்.

தெல்லிப்பளை பொலிஸார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.