யாழில் மீனவர்கள் போராட்டம்

-யாழ் நிருபர்-

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களுக்கு எதிராக குருநகரில் இருந்து பேரணி ஒன்று இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியுள்ளது.

குருநகர் கடற்றொழில் அபிவிருத்தி சங்கத்தினரால் ஏற்பாடு செய்த குறித்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகி நீரியல் வள திணைக்களத்திற்கு சென்று அங்கு மகஜர் கையளிக்கப்பட்டது.

பின்னர் அங்கிருந்து கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்திற்கு நகர்ந்து கொண்டு இருக்கின்றது.

இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கலந்துகொண்டனர்.