Last updated on January 4th, 2023 at 06:54 am

படகிற்கு தீ வைப்பு

படகிற்கு தீ வைப்பு

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம், கொழும்பத்துறை – உதயபுரம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களினால் படகிற்கு தீ வைத்து எரியூட்டப்பட்டது.

வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் படகிற்கு தீ  வைத்ததுடன், மீன்பிடி உபகரணங்களையும் வாளினால் வெட்டி சேதப்படுத்தியிருந்தனர்.

சேதப்படுத்திய காட்சி அங்கு வீடொன்றில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவில் பதிவாகியிருந்தது.

இது தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.