ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கர் – அங்கஜன் இராமநாதன் சந்திப்பு
யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை தூதர் மதிப்புமிகு ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கர் மற்றும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் ஆகிய இருவருக்கும் இடையிலான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இல, 80A கோவில் வீதி நல்லூரில் அமைந்துள்ள அங்கஜன் இராமநாதனின் மாவட்ட அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது, வடக்கு மாகாண மக்கள் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் தற்கால பிரச்சனைகள் தொடர்பாக எடுத்துரைத்த அங்கஜன் இராமநாதன், இந்திய அரசு எமது மக்களுக்கு ஆற்றிவரும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும், நாட்டின் வறுமை மிகுந்த மாவட்டங்களில் யாழ் மாவட்டமும் உள்ளடங்கியிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், எமது மாவட்ட மக்களுக்கான தேவைகள் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் மேலும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.