கட்டாக்காலி நாய்களால் பறிபோன பசுக்கன்றின் உயிர்
யாழ்.அராலி மத்தி கிராமத்தில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்ததால் கால்நடைகளை வளர்க்க முடியவில்லை என கால்நடை வளர்ப்பார்கள் தெரிவிக்கின்றனர்.
மேய்ச்சலுக்காக கட்டப்பட்டிருந்த கன்றுக்குட்டி ஒன்றினை நாய்கள் கடித்துக் குதறியுள்ளன.
இது தொடர்பில் குறித்த கன்றின் உரிமையாளர் கருத்து தெரிவிக்கையில்,
இன்றையதினம் மேய்ச்சலுக்காக கட்டப்பட்டிருந்த கன்றுக்குட்டியை கட்டாக்காலி நாய்கள் கடித்துக் குதறியுள்ளன. நாய் வளர்ப்பவர்களின் கவனக் குறைவினால் குறித்த கன்றுக் குட்டியை நாய்கள் கடித்து குதறியுள்ளன.
நாயின் உரிமையாளர்களிடம் இது தொடர்பாக பல தடவைகள் கூறியும் அவர்கள் இதனை செவிமெடுக்காத காரணத்தினால் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனால் எமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உரிய தரப்பினர் இது தொடர்பில் எமக்கு சரியான தீர்வு அளிக்க வேண்டும். அத்துடன் இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாது தடுக்கப்பட வேண்டும், என்றார்.