போதைக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கை

வடக்கில் போதை பொருள் பாவனை தலைதூக்கியுள்ள நிலையில், போதைக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள் பரவலாக நடைபெற்று வருகின்றன.

அந்தவகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அனைத்துலக தமிழர் மேம்பாட்டு நிதியத்தின் அணுசரணையுடன் ‘போதையற்ற சமூகத்தை கட்டியெழுப்புவோம்’ எனும் பெரும் தொனிப்பொருளிலான மாணவர்கள் மத்தியிலான விழிப்புணர்வு நடவடிக்கை சண்டிலிப்பாய் V.N அக்கடமியில் நடைபெற்றது.

இதன்போது மாணவர்களிடையே ஓவியம் வரைதல், கட்டுரை எழுதுதல் போன்ற போட்டிகள் இடம்பெற்றன.