ஆசிரியர் மீது தாக்குதல் : கைது செய்ய பணிப்புரை

யாழில் பாடசாலை ஆசிரியர் மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை பாடசாலை மாணவன் ஒருவன் இடைவேளைக்கு சென்று வகுப்புக்கு திரும்பாத நிலையில் ஆசிரியர் அவரைத் தேடிச் சென்றுள்ளார்.

குறித்த மாணவன் மலசல கூட பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடியதை கண்ட ஆசிரியர் அவரை நாடிச் சென்ற நிலையில் மாணவன் மதில் பாய்ந்து சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர் சிலரை அழைத்து வந்து ஆசிரியர் மீது பாடசாலையில் வைத்து தாக்குதல் நடத்தியதில் ஆசிரியரின் மண்டை உடைந்து இரத்தம் வெளியேறியது.

குறித்த விடயம் தொடர்பில் வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு தகவல் சென்ற நிலையில் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்யுமாறு ஆளுநர் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.