
சட்டவிரோத மீன்பிடியை நிறுத்தும் விசேட கலந்துரையாடல்
-யாழ் நிருபர்-
வடக்கில் சட்டவிரோதமான மீன்பிடி முறைகளை பயன்படுத்தி மீன்பிடி செயல்பாடு முன்னெடுப்பதை நிறுத்தும் முகமாக கடற்தொழில் நீரில் வளர்த்துறை அமைச்சின் ஏற்பாட்டில் கடற்தொழில் நீரியல் வள திணைக்கள பணிப்பாளர் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை விசேட கலந்துரையாடல் யாழ்ப்பாண குருநகரில் இடம்பெற்று வருகின்றது.
குறித்த கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து மீனவர் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளார்கள்.
குறித்த கூட்டத்தில் கடற்தொழில் நீரியல் வளத்துறை பணிப்பாளர் துசந்த கலந்து கொண்டு வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகள் தொடர்பில் மீனவர்களின் கருத்துக்களை ஆராய்ந்து வருகின்றார்.
