இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு
நல்லூர் கோவில் வீதிக்குள் உள்ள தனியார் விடுதி ஒன்றுக்குள் நுழைந்த வாள்வெட்டு கும்பல் அங்கிருந்தவர் மீது வாள்வெட்டினை மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின் போது படுகாயமடைந்த நபர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவத்தில் பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவரே படுகாயமடைந்துள்ளார்.
தாக்குதலை மேற்கொண்டது யார் என இதுவரை இனங்காணப்படாத நிலையில், யாழ். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.