இத்தாலி பேருந்து விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட 21 பேர் பலி
இத்தாலியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 7.45 மணியளவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட 21 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
இத்தாலியின் வெனிஸ் நகருக்கு அருகில் உள்ள பாலத்தில் இருந்து பயணிகள் பேருந்து கீழே விழுந்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ,ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
வெனிஸிலிருந்து அருகிலுள்ள மார்கெராவுக்குப் பயணித்த பேருந்தில் அதிகளவானர்கள் வேலையிலிருந்து வீடு திரும்பியவர்கள் என வெனிஸ் மேயர் லூய்கி ப்ருக்னாரோ மாநில ஊடகமான தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்களில் உக்ரேனிய, பிரஞ்சு, குரோஷிய மற்றும் ஜேர்மன் பிரஜைகள் அடங்குவதாக தெரியவருகின்றது.
இத்தாலியின் வெனெட்டோ பிராந்தியத்தின் தலைவரான லூகா ஜாயா, வடக்கு இத்தாலியில் நடந்த பேருந்து விபத்தை, “பெரிய அளவிலான சோகம்” என்று தெரிவித்துள்ளார்.
இறந்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர். இதுவரை பேருந்தின் சாரதி மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
