மக்கள் தங்கியிருந்த கூடாரங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: 35ற்கும் அதிகமானவர்கள் பலி

ரஃபாவில் தங்கியிருந்த இடம்பெயர்ந்த மக்களின் கூடாரங்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 35ற்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

உயிர் இழந்தவர்களில் அதிகமானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

காசா உட்பட சில பகுதிகளில் கடந்த 24 மணிநேரத்தில் பல தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டுள்ளதாகவும் இதில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் காசாவின் மருத்துவ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்