ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் உயிரிழந்ததாக தகவல்

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) செய்தித் தொடர்பாளர் அலி முகமது நைனி (Ali Mohammad Naini), அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரானிய அரச தொலைக்காட்சியை மேற்கோள்காட்டி இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள சூழலில், ஈரானிய இராணுவத்தின் முக்கிய உயர் அதிகாரி ஒருவர் இலக்கு வைக்கப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.