ஈரான் போர் மிக விரைவில் முடிவுக்கு வரக்கூடும் – டொனால்ட் ட்ரம்ப்

திட்டமிட்ட நேரத்தை விட விரைவாக ஈரான் போர் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

CBS News செய்தி நிறுவனத்திற்கு கருத்து தெரிவிக்கும் போது, போர் பெரும்பாலும் முடிவுக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானிடம் கடற்படை, விமானப்படை அல்லது தகவல் தொடர்பு வசதிகள் எதுவும் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

தற்போது அவர்களின் ஏவுகணைகள் சிதறடிக்கப்பட்டுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்ததாக CBS News மேலும் குறிப்பிட்டுள்ளது.