தீ விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சிசு
முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பு தொரவில் பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 06 மாத கைக்குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
வீட்டில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த விளக்கினால் ஏற்பட்ட தீப்பரவலால் குழந்தை காயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இரண்டு நாட்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளது.
குழந்தையின் குடும்பம் பொருளாதார நெருக்கடி காரணமாக ஒற்றை அறை போன்ற வீட்டில் வசித்து வருவதாகவும், சம்பவம் இடம்பெற்ற போது குழந்தையின் பெற்றோர் அறைக்கு வெளியே இருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.