அதிக செலவில்லாமல் பெப்ரவரியில் சுற்றுலா செல்ல சிறந்த நாடு இலங்கை

 

ஐக்கிய இராச்சியத்தின் ஐ நியூஸ் (iNews) இணையத்தளம் அதிக பணம் செலவழிக்காமல் பெப்ரவரி விடுமுறையை கழிக்க உலகிலேயே சிறந்த நாடு இலங்கை என்று காட்டியுள்ளது .

இந்த வருடத்தில் 12 மாதங்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு வேறு நாட்டிற்குச் சென்று விடுமுறை எடுக்கக் காத்திருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்காக அதிகப் பணம் செலவழிக்காமல் நல்ல சேவையைப் பெறக்கூடிய 12 நாடுகளின் பெயர்களை ஐ நியூஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது.

இலங்கையின் 75வது சுதந்திர தினம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இது நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளதாக அந்த இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், பெப்ரவரி மாதத்தில் விமான ரிக்கெட் விலை குறைந்த அளவிலேயே இருந்ததாகவும்,  கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 145 ரூபாயாக இருந்த ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்று தற்போது 441 ரூபாயாக மாறியுள்ளதாகவும் ஐ நியூஸ் இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

இதன் விளைவாக இலங்கையின் மலைப் பிரதேசத்திற்கு 15 நாள் பயணத்திற்கு ஒரு நபருக்கு 1845 பவுண்டுகள் செலவாகும் என iNews இணையத்தளம் தெரிவித்துள்ளது.

ஜனவரியில் மோல்டா, பெப்ரவரியில் இலங்கை, மார்ச்சில் பல்கேரியா, ஏப்ரலில் அல்பேனியா, மே மாதம் மடீரா தீவுகள், ஜூன் மாதம் பார்படாஸ், ஜூலையில் துருக்கி, ஆகஸ்ட்டில் பெல்ஜியம், செப்டம்பரில் ஜோர்டான், ஒக்டோபரில் எகிப்து, நவம்பரில் கிரீஸ், டிசம்பரில் கிரீஸ் பிக் இவ்வாறு ஐ நியூஸ் இணையதளம் அதிக செலவில்லாமல் விடுமுறைக்கு செல்வதற்கு உலகின் சிறந்த நாடுகளை காட்டியுள்ளது.