குஷ் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டுவந்த இந்திய இளைஞன் கைது!
இரண்டு கோடியே, 75 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளை நாட்டுக்கு கொண்டுவந்த இந்திய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மலேசியாவிலிருந்து இன்று திங்கட்கிழமை அதிகாலை நாட்டை வந்தடைந்த 27 வயதான இந்திய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 02 கிலோ 762 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
