இணையத்தள மோசடிகளை தடுக்க புதிய முயற்சி
இந்தியாவில் – தமிழ்நாட்டில் பத்தாயிரம் பொலிஸார்க்கு சைபர் குற்றங்களைத் தடுக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
பொள்ளாச்சியை அடுத்த திப்பம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியின் 25ஆம் ஆண்டுவிழாவில் கலந்துகொண்ட டிஜிபி, மாணவர்களுடன் கலந்துரையாடிய பின், பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த போது மாணவர்கள் இணைய குற்றங்களில் சிக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொலிஸ் நிலையங்களில் மக்களின் புகாரை உடனுக்குடன் பெற்று தீர்வுகாணும் வகையில், 2300 பேர் வரவேற்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், பயிற்சி முடித்தவர்கள் பணியில் சேர உள்ளதாகவும், 600 பொலிஸ் உதவி ஆய்வாளர்களை தேர்வுசெய்வதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.