இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் சிட்னி மருத்துவமனை ICU வில் அனுமதி!

இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், விலா எலும்புக் கூண்டு காயம் காரணமாக உள் இரத்தப்போக்கு ஏற்பட்டதாக மருத்துவ பரிசோதனைகள் தெரிவித்ததை அடுத்து, சிட்னியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஷ்ரேயாஸ் ஐயர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டு, கண்காணிப்பு மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர் சுமார் ஐந்து முதல் ஏழு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் களத்தடுப்பு செய்யும் போது ஷ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டது.

ஷ்ரேயாஸ் ஐயர் விரைவில் குணமடைய வேண்டும் என்று கிரிக்கெட் ரசிகர்களும் அணி வீரர்களும் சமூக ஊடகங்களில் தமது பிரார்த்தனைகளை பகிர்ந்துள்ளனர்.