Last updated on January 4th, 2023 at 06:53 am

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் ரிஷப் பண்ட் விபத்தில் படுகாயம்

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் ரிஷப் பண்ட் விபத்தில் படுகாயம்

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கி பிரதேசத்தில் அவர் பயணித்த கார் பாதையின் ஓரத்தில் காணப்பட்ட தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தையடுத்து குறித்த கார் தீப்பற்றியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தின் ரிஷப் பண்டின் கால், தலை மற்றும் முதுகுப் பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், அவர் ஆபத்தாக கட்டத்திலிருந்து வெளியேறியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்களை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க