15 வயது சிறுமி மீது பாலியல் பலாத்காரம் : சாமியார் கைது

இந்தியா-ஆந்திராவில் உள்ள ஆசிரமத்தில் தங்கியிருந்த 15 வயது சிறுமியை மிரட்டி பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த சாமியாரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வென்கோஜியில் ஞானானந்த ஆசிரமத்தின் , நிர்வாக அதிகாரியாக சாமியார் பூர்ணானந்த சரஸ்வதி (வயது-64) செயல்பட்டு வருகிறது. இந்த ஆசிரமத்தில் தாய், தந்தை இல்லாதவர்கள், பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள் ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் சாமியார் பூர்ணானந்தா சரஸ்வதி, 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகவும் , கடந்த சில மாதங்களாக மடாதிபதி அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வெளியில் சொன்னால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டல் விடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து குறித்த சிறுமி சம்பவம் குறித்து வெளியில் கூற முடியாமல் மனம் நொந்து இருந்த நிலையில் இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட மடாதிபதி பூர்ணானந்தா சிறுமியை தொடர்ந்து வலுக்கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார்.

இதையடுத்து சிறுமி யாருக்கும் தெரியாமல் ஆசிரமத்தை விட்டு வெளியேறி ரயில் மூலம் விஜயவாடா சென்ற நிலையில் அங்கு வைத்து பொலிசார் சிறுமியை மீட்டு விசாரித்துள்ளனர். விசாரணையில் சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைகளை தெரிவித்துள்ளார்.

சம்பவம் குறித்து திஷா போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் போக்சோ வழக்குப்திவு செய்தனர். மேலும் சாமியார் பூர்ணானந்தாவை உடனடியாக நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அதன்பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே தான் சாமியார் சிறுமிக்கு இழைத்த கொடூரம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி உதவி பொலிஸ் ஆணையாளர் விவேகானந்தா தெரிவிக்கையில் , கொடுமை தாங்க முடியாமல் பணியாளர் ஒருவரின் உதவியுடன் சிறுமி ஆசிரமத்தை விட்டு வெளியேறினார். அதன்பிறகு திருமலா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி விஜயவாடா சென்ற நிலையில் இவர் மீட்கப்பட்டார்.

தற்போது கைதான சாமியார் பூர்ணானந்தா சரஸ்வதி பாலியல் வழக்கில் சிக்குவது முதல் முறையல்ல. கடந் 2012ல் 13 வயது சிறுமிக்கு ஆசிரமத்தில் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பொலிசார் கைது செய்து இருந்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தற்போது அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.