Last updated on January 4th, 2023 at 06:53 am

தடுப்புசி மையத்தில் வெறிபிடித்த நாயால் பரபரப்பு

தடுப்புசி மையத்தில் வெறிபிடித்த நாயால் பரபரப்பு

வெறி நோய் தடுப்பூசி முகாமில் திடீரென வெறி பிடித்த நாயால் பொதுமக்கள் சிதறி ஓடிய சம்பவம் ஒன்று இந்தியாவில் இடம் பெற்றுள்ளது.

இந்தியா கிருஷ்ணகிரி பி.ஆர்.சி பள்ளி வளாகத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் மூலம் வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி முகாமை தொடங்கி வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இந்த முகாமில் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களை அழைத்து வந்து தடுப்பூசி செலுத்தினர். அப்போது தடுப்பூசி செலுத்த அழைத்து வந்த நாய் ஒன்று வெறி பிடித்து அங்கிருந்தவர்கள் மீது பாய்ந்தது.

மேலும் அங்கு இருந்த மற்றொறு நாயை கடித்து குதறியது. வெறிபிடித்த நாயை கட்டுபடுத்த முடியாமல் அங்கிருந்தவர்கள் கையில் கிடைத்த பொருட்களை கொண்டு வெறிபிடித்த நாயை தாக்கினர்.

இறுதியில் நாயின் உரிமையாளர் வெறி பிடித்த தனது நாயை கட்டுபடுத்தி பெல்டில் கட்டினார். தடுப்பூசி செலுத்திகொள்ள வந்த நாய்க்கு திடீரென வெறிபிடித்து அங்கிருந்தவர்களை கடிக்க பாய்ந்ததால் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள்  அலரியடித்து கொண்டு ஓடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.