ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்வனவு செய்ய இந்தியாவுக்கு 30 நாட்கள் காலக்கெடு!

இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கு 30 நாட்கள் காலக்கெடு அளிப்பதாக அமெரிக்க நிதித்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் அறிவித்துள்ளார்.

நிதித்துறையின் வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC) இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்றைய நிலவரப்படி, கப்பல்களில் ஏற்றப்பட்ட ரஷ்ய கூட்டமைப்பின் கச்சா எண்ணெய் மற்றும் பெற்றோலியப் பொருட்களை இந்தியாவிற்கு விற்பனை செய்யவும் மற்றும் விநியோகம் செய்யவும் அனுமதிக்கும்” உரிமத்தை வழங்கியுள்ளது.

பல்வேறு தடைகளால் முடக்கப்பட்டிருந்த கப்பல்கள் உட்பட, இந்த வர்த்தகப் பரிவர்த்தனைகள் அனைத்தும் எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி நள்ளிரவு வரை அனுமதிக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், உலகளாவிய எரிசக்தி சந்தைகளை நிலைப்படுத்துவதற்காக அமெரிக்க நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், உலகளாவிய எரிசக்தி சந்தைகளை நிலைப்படுத்துவதற்காக அமெரிக்க நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.