இந்தியாவில் முதல் முறையாக லித்தியம் உலோகம் கண்டுபிடிப்பு
இந்தியாவில் முதல் முறையாக லித்தியம் உலோகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சுரங்க அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்தியா புவியியல் ஆய்வு அமைப்பு இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் நடத்தப்பட்ட ஆய்வில் லித்தியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் ரைசி மாவட்டத்தில் சலால்-ஹைமனா பகுதியில் லித்தியம் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 5.9 மில்லியன் தொன் லித்தியம் அந்த பகுதியில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மிகப்பெரிய அளவில் லித்தியம் உலோக தொகுப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் மின்சார வாகனங்களுக்கான மூலப்பொருளான லித்தியம் பேட்டரி இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
மிக இலகுவான உலோகமான அது தண்ணீருடன் எரியக்கூடிய எதிர்வினையை உருவாக்குகிறது. மனித சதையை எரிக்கும் அளவுக்கு மிகவும் தீவிரமானது இந்த உலோகம்
மட்பாண்டங்கள், கண்ணாடி, மருந்து கலவைகள், காற்றுச்சீரமைப்பிகள் மற்றும் அலுமினியம் உற்பத்தியில் லித்தியம் பயன்படுத்தப்படுகிறது. இது குறைந்த அடர்த்தியான உலோகமாக இருப்பதால், ஒரு கிலோவிற்கு மேல் ஆற்றல் சேமிப்பு திறன் கொண்டது.
