Sri Lanka Tamil News Site

விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரிப்பு

- Advertisement -

-கல்முனை நிருபர்-

கிழக்கில் தற்போது மழையுடன் கூடிய காலநிலை நிலவிவருகின்றது. இதன் காரணமாக மக்கள் குடியிருப்புக்களை அண்டிய பகுதிகளில் விஷஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.

மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நிற்பதுடன் இங்கு முகத்துவாரமும் வெட்டப்பட்டுள்ளது. இதனால் நீர் நிலைகளை அண்டிய பகுதிகளில் காட்டு நீரில் அடித்து வரப்பட்ட பாம்பு, முதலை உட்பட, விஷ பூச்சிகள் ஆகியனவற்றின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகின்றன.

இவ்வாறான விஷ ஜந்துக்கள் மக்கள் குடியிருப்புக்களில் புகுந்து அச்சத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக இங்குள்ள மீள்குடியேற்றக் கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாம்புக் கடிக்கு இலக்காகி வருகின்றனர். குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், வயோதிபர்கள் ஆகியோரே இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

தற்போது இப் பகுதிகளில் நல்ல பாம்பு, புடையன், காட்டுவிரியன், , கண்டன் கரிவளலை, உட்பட விஷ பூச்சிகள் உலாவுகின்றன. அதிகமானோர் இரவு நேரங்களில் பாம்பு கடிக்கு இலக்காகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

- Advertisement -