காத்தான்குடி வாவிக்கரை பூங்கா மற்றும் சுற்றுலா படகுச் சேவை அங்குரார்ப்பணம்
காத்தான்குடி நகரின் அழகையும் சுற்றுலாத் துறையின் முன்னேற்றத்தையும் புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் வழிகாட்டலின் பேரில் உருவாக்கப்பட்ட “வாவிக்கரை பூங்கா மற்றும் சுற்றுலா படகுச் சேவை” நேற்று ஞாயிற்றுக்கிழமை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டு திட்டத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

இவ்விழாவில் நகர சபை உபதவிசாளர், சபை உறுப்பினர்கள், சமூகத் தலைவர்கள், நலன்விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் என பெரும்திரளானோர் கலந்து சிறப்பித்தனர்.


