
மட்டு.செங்கலடியில் “பரலோக தரிசன எழுப்புதல் அறுவடை சபை” திறப்பு விழா
மட்டக்களப்பு, செங்கலடி – ஐயங்கேணி பாரதி கிராமத்தில் புதிய ‘பரலோக தரிசன எழுப்புதல் அறுவடைச் சபை’ (Heavenly Vision Revival Harvest Church) திறப்பு விழா நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்
இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்,
தமிழ் மக்களிடையே பலமான ஒற்றுமை நிலவ வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு சமூகத்தில் நிலவ வேண்டிய அமைதி மற்றும் நல்லிணக்கம் என்பவற்றோடு தமிழ் சமூகம் ஒருமித்த கருத்துடன் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இந் நிகழ்வில் சுயாதீன போதகர்கள் ஐக்கியத்தின் தலைவர், மட்டக்களப்பு மாவட்ட போதகர்கள் ஐக்கியத்தின் தலைவர், மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட போதகர்கள், திருச்சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.


