IMFஇன் 6ஆவது தவணையின் தொகையை அதிகரிக்க அரசாங்கம் திட்டம் – ஜனாதிபதி

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) மூலம் இந்த மாதம் டிசம்பரில் வழங்கப்படவிருந்த ஆறாவது தவணையின் (Sixth Tranche) தொகையை அதிகரிப்பது குறித்து அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று  வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகச் சபையானது 342 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஆறாவது தவணையை டிசம்பர் 15, 2025க்குள் அங்கீகரிக்கத் திட்டமிடப்பட்டிருந்ததாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஆனால், அந்தத் தொகையை அதிகரிப்பதற்காக, ஆறாவது தவணையை அடுத்த ஆண்டு பெப்ரவரி வரை ஒத்திவைக்க அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் கோரியுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.