IMF உடன் பேச்சுவார்த்தை நடத்திய அரசாங்கத்திற்கு வரிச் சுமையைக் குறைக்க முடியவில்லை – சஜித் பிரேமதாச
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ள தற்போதைய அரசாங்கத்துக்கு, பொதுமக்களைப் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ள வரிச் சுமையைக் குறைக்க முடியாமல் உள்ளதாக ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அவிசாவளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளது.
மக்களுக்குப் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ள வரிச் சுமையைக் குறைப்பதற்குத் தற்போதைய அரசாங்கத்துக்கு முடியாமல் உள்ளது.
ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது.
இந்த சந்திப்புகளின் போது வரிச் சுமையைக் குறைப்பதற்காகச் சர்வதேச நாணய நிதியம் வழங்கிய பதில் என்னவென கேள்வி எழுப்ப வேண்டும்.
தற்போதைய ஜனாதிபதியுடன் திறமை வாய்ந்த பொருளாதார அணியொன்று இல்லாத பிரச்சினை காணப்படுகிறது.
எனினும் அவ்வாறானதொரு அணி தங்களுடன் இருப்பதாக ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
