ILT20 தொடருக்கான ஏலத்தில் UNSOLD ஆன அஸ்வின்
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வின் கடந்த டிசம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார்.
ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த கையோடு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.எல்.டி டி20 லீக் தொடருக்கான ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.
இதன்படி அஸ்வின் தனது அடிப்படை விலையாக ரூ.1.06 கோடி என நிர்ணயித்திருந்தார்.
இது எந்த வீரருக்கும் இல்லாத அதிகபட்ச விலையாகும்.
இந்தநிலையில், ஏலத்தில் அஷ்வினை எந்த அணியும் எடுக்கவில்லை.
அதே சமயம் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் BBL தொடரில் அஸ்வின் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.