ILT20 தொடரில் பங்கேற்கும் இலங்கை வீரர்கள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள ILT20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள  8 இலங்கை வீரர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி சரித் அசலங்க, வனிது ஹசரங்க, தசுன் சானக்க, துஷ்மந்த சமீர, குசால் பெரேரா, குசால் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ் மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகியோர் குறித்த தொடரில் பங்கேற்கவுள்ளனர்.

34 போட்டிகளைக் கொண்ட இந்த தொடரானது எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.