பொகவந்தலாவையில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த சந்தேக நபரொருவர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 47 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபரை எதிர்வரும் 25 ஆம் திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்