
யாழில் மீட்கப்பட்ட சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள்!
யாழில் இரண்டு கடைகளில் இருந்து சட்டவிரோத இலத்திரனியல் உபகரணங்கள் மீட்கப்பட்டன.
இலத்திரனியல் உபகரணங்களை விற்பனை செய்கின்ற, யாழ்ப்பாணத்தில் உள்ள 4 கடைகளும், ஊரெழு பகுதியில் உள்ள ஒரு கடையிலும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது, தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் அனுமதியின்றி 2 கடைகளில் இலத்திரனியல் உபகரணங்கள் விற்பனைக்காக வைத்திருந்த நிலையில் மீட்கப்பட்டன.
தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்கள் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் ஆகியோர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மீட்கப்பட்ட சட்டவிரோத இலத்திரனியல் பொருட்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
