
பிரதியமைச்சர் கலந்து கொண்ட இப்தார் நிகழ்வு
-மூதூர் நிருபர்-
மூதூர் -ஆணைச்சேனை ஜும்ஆ பள்ளிவாசலின் ஏற்பாட்டில் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது.
சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த இப்தார் நிகழ்வை பள்ளிவாசல் நிருவாகம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.
இவ் இப்தார் நிகழ்வில் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர, பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன,மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி,தேசிய மக்கள் சக்தியின் மூதூர் பிரதேச அமைப்பாளர் எம்.கே. சப்றான் ,மூவினங்களையும் சேர்ந்த பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
