Sri Lanka Tamil News Site

மனித கடத்தல்காரர்களை நோக்கி தேடுதல் வேட்டை

- Advertisement -

மனித கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அதிகாரி அளவிலான முன்னேற்ற ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ், பொலிஸ் திணைக்களம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் குடிவரவுத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு இடையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆள் கடத்தலில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்கவும், ஆள் கடத்தல் மற்றும் ஆள் கடத்தலில் ஈடுபடுபவர்களை தரம் பாராமல் தண்டிக்கவும் நாடு முழுவதும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மனித கடத்தலில் ஈடுபடும் இலங்கையர்கள் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் தொடர்ச்சியாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று எடுக்கப்பட்ட முடிவுகளின்படி தேடுதல் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட உள்ளன.

ஆள் கடத்தல் மற்றும் மனித கடத்தல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்றையும் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!