
ஐஸ்க்ரீமுக்குள் மனித விரல்
இந்தியா – மும்பையின் மலாட் பகுதியில் கோன் ஐஸ்கிரீமில் துண்டிக்கப்பட்ட மனித விரல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மலாட் பகுதியில் 27 வயதான பெண் மருத்துவர், ஒன்லைனில் வாங்கிய கோன் ஐஸ்கிரீமிலேயே இந்த விரல் துண்டு இருந்துள்ளது.
இதனையடுத்து குறித்த பெண் ஐஸ்கீரிமுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
பொலிஸார் கோன் ஐஸ்கிரீமில் இருந்தது மனித விரல் என்பதை உறுதிப்படுத்துவதற்காக, அதனை தடயவியல் பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஐஸ்கீரீம் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடாத்தி வருவதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
